சேலத்தில் பெண்ணை கிண்டல் செய்த முதியவர் அடித்து கொலை

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 12:00 pm
old-man-murder-in-salem

சேலத்தில், குடிபோதையில் பெண்ணை கிண்டல் செய்த 70 வயது முதியவர் கட்டையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் அம்மாப்பேட்டை அருகே உள்ள பாபு நகர் பகுதியில் தனியாக வசித்து வந்தவர் ஆறுமுகம். 70 வயதான இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். மதுபோதையிலிருந்த முதியவர் ஆறுமுகம்  பக்கத்து வீட்டுப் பெண் ஒருவரை பாட்டுப்பாடி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் முரளி உள்ளிட்ட மூன்று பேர் ஆறுமுகத்தை கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர். பின்னர்,இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முரளி உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close