கோவையில் மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை சிறைபிடித்த மக்கள்

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 01:42 pm
the-bus-driver-with-alcohol-intoxication-in-coimbatore

 

கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மது போதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டியதையடுத்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
நேற்று இரவு TN39 N 0012 என்ற எண் கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான கோவையிலிருந்து திருச்சி செல்லக்கூடிய பேருந்தானது, கோவை அரசு மருத்துவமனை நிறுத்ததிலிருந்து  இருந்து ஒண்டிபுதூர்  அருகே சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், சுமார் எட்டு முப்பது மணி அளவில், இந்த பேருந்தானது ஒண்டிபுதூர் மேம்பாலம் அருகே திடீரென உரசியது.  இதனால், சுதாரித்துக்கொண்ட முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி சந்தேகத்தின் அடிப்படையில் சக பயணிகளிடம் ஓட்டுநர் மது போதையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஒன்று சேர்ந்த சகபயணிகள் ஓட்டுநர் மது போதையில் இருப்பதை உறுதிப்படுத்தி பேருந்தை ஒண்டிபுதூர் இருகூர் பிரிவு அருகே நிறுத்தச்செய்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பேருந்து ஓட்டுனர் தள்ளாடியபடி இருந்த சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகளை கோபத்தில் ஆழ்த்தியது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close