சென்னையில் மது போதையில் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 03:54 pm
father-killed-by-own-son-in-chennai

சென்னையை சேர்ந்த பழ வியாபாரியான தமிழ்ச்செல்வனை அவரது மகன்  சூரியபிரகாஷ் மது போதையில் குத்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை பாடி மதுரவீரர் கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரியான தமிழ்ச்செல்வன்(60). இவரது மகன் சூரியபிரகாஷ் வயது 26 குடிபோதைக்கு அடிமையாகிய‌ இவர், தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளார். 

இந்நிலையில்,நேற்று இரவு தமிழ்செல்வம் அவருடைய மனைவி , சூரியபிரகாஷ் , குமரேன் , பிரியா நான்கு பேரும் பழகடையை மூடி விட்டு வீட்டிற்கு வந்தனர். பின்னர், இரவு 1:30 மணி அளவில் வழக்கம் போல் குடிபோதையில் வந்த சூரிய பிரகாஷ் தந்தை தமிழ் செல்வம் இடம் தகராறு செய்துள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா பிரகாஷ் தனது தந்தையான  தமிழ்ச்செல்வனை கத்தியால் குத்தி விட்டு  தப்பியோடிவிட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த  தமிழ்செல்வனை  அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அற்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்..

இதுகுறித்து தகவலறிந்த ஜெ.ஜெ. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ்ச்செல்வனை பிரேத பரிசோதனைக்காக சென்னை  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சூரியபிரகாஷ்  மீது 302 , 506 , ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் சுரேந்திரன் தலைமையிலான போலீஸார், அவரைத் தேடி வந்த, நிலையில் கோயம்பேட்டில் மறைந்திருந்த சூரியபிரகாஷை போலீஸார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close