கும்பகோணத்தில் கொட்டி தீர்த்த மழை..! மகிழ்ச்சியில் மக்கள்..!

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 03:19 pm
heavy-rain-in-kumbakonam

கும்பகோணத்தில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், ஒரு மணி நேரமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையினால் விவசாயிகளும்,  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், எப்போது மழை பெய்யும் என்று அனைத்து பகுதி மக்களும்  எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், கும்பகோணம் நாச்சியார் கோவில் பகுதியில்  காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதனையடுத்து, மதியம் பலத்த காற்றுடன் இடி இடித்து, ஒரு மணி நேரமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்,  இந்த ஒரு மணி நேர மழையினால் விவசாயிகளும், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை காரணமாக கும்பகோணம் நகரத்தின் சீதோஷ்ண நிலையே தற்போது மாறியுள்ளதானது மக்களிடையே புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.

கீழே உள்ள வீடியோவில் கும்பகோணம் நாச்சியார் கோவிலில் மழை பெய்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் காட்சியைக் கண்டாலே நம் மனம் குதூகலமடையும். மழை பெய்யாமல் பல ஊர்களில் வசிக்கும் வாசகர்கள் மழை பெய்யும் காட்சியை கீழே உள்ள வீடியோவிலாது கண்டு களியுங்கள் 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close