வாக்கு எண்ணும் மையங்களில் கோவை ஆட்சியர் ஆய்வு

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 04:23 pm
coimbatore-collector-examined-the-voting-centre

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் பழுதான ஒரு சில சி.சி.டி.வி. கேமராக்களை சீர்செய்யும் பணிகள், மாவட்ட ஆட்சியர் ராசாமணி முன்னிலையில் நடைபெற்று வருகின்றன.

கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியல் கல்லூரியில் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளந. அங்கு சில கண்காணிப்பு கேமராக்கள் இயங்கவில்லை என எழுந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்  ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதில், ஒரு சில சி.சி.டி.வி. கேமராக்கள் இயங்கவில்லை, சில இடங்களில் கேமரா வயர்கள் பழுதடைந்து உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவற்றை  சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும், இது போன்ற பழுதுகள் விரைவில் சரி செய்யப்படும் எனவும், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close