மதுரை: சிறைவாசிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது

  ராஜேஷ்.S   | Last Modified : 23 Apr, 2019 09:50 pm
madurai-the-protest-of-prisoners-ended

மதுரை மத்திய சிறையில் போலீசார் துன்புறுத்துவதாக சிறைவாசிகள் இன்று சுவரில் ஏறி நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சோதனை என்ற பெயரில் போலீசார் தினசரி துன்புறுத்துவதாக கூறி 50க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் சிறைவளாகத்தில் உள்ள கட்டிடங்களில் மேல் அமர்ந்து கற்களை வீசி அரை நிர்வாணத்தோடு மதியம் 3மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது சிறைத்துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதோடு உடல் முழுவதிலும் பிளேடால் அறுத்து காயம் ஏற்படுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். 

சிறைவாசிகளின் திடீர் போராட்டத்தின் காரணமாக புதுஜெயில் ரோடு முழுவதிலும் கற்கள் குவியல்குவியலாக காணப்பட்டன. இதனையடுத்து சாலை முழுவதிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  

சிறைவாசிகள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறை சட்ட ஒழுங்கு இணைஆணையர் சசிமோகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இதனையடுத்து சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா,  தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதையடுத்து 3 மணி நேர தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் முடிவடைந்த நிலையில் போக்குவரத்து தொடங்கியது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close