சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த்திரு விழா நிறைவு

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 11:56 am
samayapuram-mariamman-temple-function

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைதேரோட்டத்தின் நிறைவு  நாளான நேற்று மாலைஅம்மனுக்கு அபிஷேகம் நிறைவடைந்த பிறகு இரவு  தங்க கமலவாகனத்தில் வீதி் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்  மாரியம்மன்.

 திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த16 ந்தேதி சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி   அம்மனை வழிபட்டு சென்றனர். அதன்தொடர்ச்சியாக அம்மன் காமதேனு வாகனம், முத்துபல்லக்கு,தெப்பத்தேரில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


 இந்நிலையில் சித்திரைதேரோட்டத்தின் நிறைவு  நாளான நேற்று மாலைஅம்மனுக்கு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு இரவு  தங்க கமலவாகனத்தில் வீதி் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து மூலஸ்தானம்  சென்றடைந்தது. 

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனைதரிசனம் செய்தனர்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close