கோவை தொழிலதிபர் கொலையில் தொடர்புடைய முன்னாள் காவலருக்கு வலை வீச்சு 

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 05:43 pm
the-policeman-main-accused-of-coimbatore-murder

கோவையில் கடந்த 18ஆம் தேதி தொழில் முன்விரோதம் காரணமாக தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான முன்னாள் காவலர் உட்பட 5 பேரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மீனா எஸ்டேட்டை சேர்ந்தவர் பரந்தாமன்(36). இவர், போத்தனூரில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். மேலும், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்தார். தொழில் முன் விரோதம் காரணமாக, பரந்தாமன் நாடாளுமன்ற தேர்தல் நாளான கடந்த 18-ம் தேதி, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக போத்தனூர் போலீஸார், சின்னியம்பாளையம் கோல்டு வின்ஸ் பகுதியைச்சேர்ந்த கார் ஒர்க் ஷாப் உரிமையாளர் ரவி (30), சென்னையைச் சேர்ந்த மருதுபாண்டி (30), திருப்பூரை சேர்ந்த நவீன் (25), சென்னையைச் சேர்ந்த லோகேஸ், பெரம்பலூரைச் சேர்ந்த டேவிட், கும்பகோணத்தை சேர்ந்த கார்த்திக் ஆகிய 6 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், இந்த கொலை வழக்கின், முக்கிய குற்றவாளியான இடையர்பாளையத்தை சேர்ந்த கார்த்தி உட்பட மேலும் 5 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கார்த்திக் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் சில ஆண்டுகள் காவலராக பணியாற்றி, பின்னர் கார் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டதால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் இருந்து  நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 இவர் மீது திருட்டு, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், தனிப்படை போலீசார் கார்த்தி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வீசி தேடி வருகின்றனர்.

மிக விரைவில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என  கோவை போலீசார் தெரிவித்துள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close