சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.2 கோடி காணிக்கை!

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 11:21 am
rs-2-crore-donation-to-samayapuram-mariamman-temple

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 12 நாட்களில் சுமார் 2 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது. 

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில் திருவிழாக்கள் நிறைவடைந்ததையடுத்து, கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. 

இதில் 12 நாட்களில் ரூ.1,30,75,905 ரொக்கமும், 2 கிலோ 362 கிராம் தங்கமும், 10.450 கிலோ வெள்ளியும், 244 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியிருப்பதாக கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close