அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ., வீடு திரும்பினார்!

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 11:44 am
dmk-mla-was-treated-in-apollo-returned-home

நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ., கு.க.செல்வம் இன்று வீடு திரும்பினார். 

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான கு.க.செல்வத்திற்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் உடல்நிலை சீரானதால், இன்று காலை வீடு திரும்பினார். தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close