சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 25 Apr, 2019 12:59 pm
one-man-death-on-collide-a-stone-in-the-middle-of-the-road

சாலையின் நடுவில் கல்லை வைத்து விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மதுரை பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 12  மணியளவில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது , திருப்பரங்குன்றம் பூங்கா பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையின் நடுவில் இருந்த கல்லில் மோதி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பூங்கா பேருந்து நிலையம்  பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை பார்வையிட்டனர். அதில் இரவு ஒரு மணியளவில் ஒருவர் சாலையின் நடுவில் கல்லை வைத்ததும், அதில் பாஸ்கர் மோதிக் கீழே விழுந்ததும் அவர் சட்டைப்பையில் இருந்த கைபேசி மற்றும் பணத்தை அந்த மர்மநபர் எடுத்துச் சென்றதும் பதிவாகியிருந்தது.

மேலும், அந்த சாலையில் சென்ற நபர்கள் கல்லை எடுத்து போடுவதற்காக நின்றபோது, அவர்களை விரட்டியதும்,  அடிபட்டு கீழே விழுந்தவரை காப்பாற்ற வந்தவர்களை மிரட்டி அனுப்பியதும் பதிவாகியிருந்தது. அந்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close