சென்னையில் காய்கறி விலை உயர்வு!

  அனிதா   | Last Modified : 25 Apr, 2019 01:15 pm
vegetable-prices-increased-in-chennai

கோடைகால விளைச்சல் குறைவு காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடும் உயர்வை எட்டியுள்ளது

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வருகின்றன. வழக்கமாக கோடைகாலங்களில் விளைச்சல் குறைவாக இருப்பதினால் காய்கறியின் விலை சற்று அதிகமாக விற்கும். இந்தாண்டு மழை பொழிவும் குறைவானதால் காய்கறிகளின் விலை சடசடவென உயர்ந்து வருகிறது.

கடந்த வாரம் 20,30 ரூபாய்க்கு விற்பனையான காய்கறிகள் இன்று 50,60 ரூபாய்க்கும், பீன்ஸ், பட்டாணி கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையாகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலையுயர்வால் விற்பனை மந்தமாக இருப்பதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close