17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய நபர் கைது!

  அனிதா   | Last Modified : 25 Apr, 2019 02:03 pm
a-man-arrested-under-the-pocso-act

கும்பகோணத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அழகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆஷா (17). இவர் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராமன் (24) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.  இருவரும் நெருக்கமாக பழகியதில் ஆஷா 4 மாத கர்ப்பிணியாக தற்போது உள்ளார். இந்நிலையில், திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்ட ராமன் தற்போது திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். 

இதையடுத்து, ராமனை திருமணம் செய்து வைக்க கோரி கும்பகோணம் அனைத்து பிரிவு மகளிர் காவல்நிலையத்தில், ஆஷா புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், சிறுமியை ஆசை வார்த்தை கூறி மோசம் செய்த குற்றவாளி ராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close