தன்னை இடையூறு செய்த ஆதரவாளர்களை டிடிவி கண்டித்திருக்க வேண்டும் : கிருஷ்ணசாமி

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 03:41 pm
ttv-should-condemn-the-supporters-who-interfere-during-the-campaign-krishnaswamy

தேர்தல் பிரச்சாரத்தின்போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தம்மை பிரச்சாரம் செய்யவிடாமல் இடையூறு செய்ததாகவும், இதனை தினகரன் கண்டித்திருக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், தமிழகத்தில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்ந்து 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு, அதனை வெற்றி பெற செய்வோம். குற்றப் பின்னணி கொண்டவர்கள் தனி அமைப்பை தொடங்கி பல்வேறு அவதூறு, சமூக விரோத செயல்களை பரப்பி வருகின்றனர். இவர்களை தூண்டியவர்களை காவல் துறையினர் கைது செய்து மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இளைஞர்கள் சமூக வலைதளங்களில் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்யவிடாமல் இடையூறு செய்தனர். இதனை டிடிவி தினகரன் கண்டித்திருக்க வேண்டும் என கிருஷ்ணசாமி தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close