கோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்

  அனிதா   | Last Modified : 25 Apr, 2019 06:04 pm
coimbatore-less-likely-to-be-affected-of-storms

இரண்டு நாட்களுக்குப் பிறகு வடதமிழகத்தில் புயல் தாக்கக்கூடும் என அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில், அந்தப் புயலால் கோவை மாவட்டத்திற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு என கோவை வேளாண் பல்கலைக்கழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று இரண்டு நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், புயலின் தாக்கம் குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் ராமநாதன் கூறியதாவது :- புயலால் கோவை மாவட்டத்திற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், தற்போது பெய்து வரும் மழையின் அளவு சற்று அதிகரிக்க கூடும்.

கோவை மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் சராசரியாக 137 மி.மீ அளவிற்கு மழை பொழிவு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் பெய்ய வேண்டிய 18.2 மி.மீ அளவிலான மழை பெய்யவில்லை. ஏப்ரல் மாதத்தில், கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் 23.6 மி.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, 23 ஆம் தேதியன்று மட்டுமே 19.4 மி.மீ அளவிற்கு மழை பெய்தது. அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் 10 மி.மீ அளவிற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே மாதத்தில் 50 மி.மீ அளவிற்கு மழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் வெப்பத்தை உணர முடியாத அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது. இந்த ஆண்டு மழைப்பொழிவு இல்லாததால், அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் சராசரியாகவே இருக்கும். மே 4 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர வெயில் இருக்கும், என அவர் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close