தலையில்லா பெண் உடல் மீட்பு விவகாரம்: குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

  அனிதா   | Last Modified : 26 Apr, 2019 11:33 am
double-life-sentence-for-criminals

தில்லைநகர் பகுதியில் தலையில்லாமல் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

திருச்சி மாவட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதியன்று தலை வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.  இச்சம்பவம் குறித்து தில்லை நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண் புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் பகுதியை சேர்ந்த சசிகலா என்பதும், இவர் திருச்சி ஜீவா நகரைச் சேர்ந்த சந்தியா என்ற உறவு பெண்ணை அடிக்கடி சந்திக்க வந்ததும் தெரியவந்தது. மேலும், சந்தியாவை சந்திக்க வந்தபோது எதிர்வீட்டில் இருந்த சரவணனுடன் பழக்கம் ஏற்பட்டதன் காரணமாக சசிகலாவிடம் இருந்து சரவணன் பணம், நகைகளை ஏமாற்றி பெற்று வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சசிகலா தன்னை திருமணம் செய்யக்கோரி சரவணனை வற்புறுத்தியதால், ஏற்கனவே சந்தியாவுடன் தொடர்பில் இருந்த சரவணன் அவரது நண்பர் சுரேஷின் துணையுடன் 3 பேரும் திட்டமிட்டு சசிகலாவை கொலை செய்து உடலை தில்லைநகர் கழிவுநீர் கால்வாயிலும், தலையை உய்யக்கொண்டான் வாய்க்காலிலும் வீசி சென்றுள்ளனர். 

இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், 3 பேரும் திட்டமிட்டு கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சரவணன், சுரேஷ் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், சந்தியாவிற்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close