ரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை ஏன்? டிஐஜி விளக்கம்

  அனிதா   | Last Modified : 26 Apr, 2019 12:07 pm
why-bomb-test-at-railway-stations-dig-explanation

தமிழகத்தின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு முன் ஏற்பாடு குறித்த ஒத்திகை நடைபெற்று வருதாக தமிழ்நாடு ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பின் எதிரொலியாக, தமிழ்நாட்டில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க பல முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து ஆப்ரஷேன் ஸ்ட்ரோமிங் எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில், கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட வந்த தமிழ்நாடு ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா, வெடிகுண்டு கடத்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறதா  என்பதை கண்காணிப்பதற்கும் அதனை எந்த அளவுக்கு எதிர்கொள்வது என்பது குறித்த ஒத்திகையும் இன்று நடை பெறுகிறது.

இதில் மத்திய இரயில்வே காவலர்களும் ரயில்வே அதிரடி படையினரும், தமிழ்நாடு ரயில்வே காவலர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சிகள் மதுரை, திருச்சி, கோவை போன்ற முக்கிய முனையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் நோக்கம் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை முன்கூட்டியே தடுக்கவும், அவ்வாறு ஏற்படும் சமயத்தில் துரிதமாக செயல்படுவதுமே ஆகும்.

இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவை வருங்காலத்தில் பூர்த்தி செய்யப்படும். அதே நேரத்தில் இந்த நடவடிக்கைகள் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாத வகையில் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close