பெண்ணை வழிமறித்து தங்க செயின் பறிப்பு!

  அனிதா   | Last Modified : 26 Apr, 2019 01:23 pm
gold-chain-flush

கும்பகோணத்தில் நியாயவிலைக் கடை ஊழியரை பின்தொடர்ந்து சென்று கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வட்டி பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கபிர்தாசன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி நியாய விலை கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு தனது மகனை அழைத்துவருவதற்காக கும்பகோணம் பேருந்துநிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 

அப்போது, மர்ம நபர்கள் 2 பேர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று, வழிமறித்து சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் கும்பகோணம் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close