போலி துப்பாக்கி, போலி ரூபாய் நோட்டுடன் பிடிப்பட்ட போலி வக்கீல்!

  அனிதா   | Last Modified : 26 Apr, 2019 04:15 pm
fake-lawyer-caught-with-fake-gun-and-fake-money

திருச்சியில் போலி துப்பாக்கியை வைத்து மிரட்டிய, போலி வழக்கறிஞர், போலி ரூபாய் நோட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருச்சி மாவட்டம் புத்தூர் ஆபிசர் காலனியை சேர்ந்தவர் சிராஜிதீன். இவர் கடந்த சில நாட்களுக்கு  முன்பு திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக சென்ற போது, அங்கு ஏற்பட்ட தகராறில் நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதியை சேர்ந்த முகமது தாவர் அலி என்பவர்,  துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிராஜிதீன் கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், கோட்டை போலீசார் இன்று வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அந்த பகுதியை கடந்து சென்ற முகமது தாவர் அலியை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தனர். அப்போது, தான் ஒரு வழக்கறிஞர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவரிடம் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.

மேலும் அவர் அபராதமாக செலுத்திய ரூபாய் நோட்டுக்கள் போலீசாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியதையடுத்து சோதனையிட்ட போது அது போலி ரூபாய் நோட்டுக்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த அனைத்து 200 மற்றும் நூறு ரூபாய் நோட்டுகளை (சுமார் 50) பறிமுதல் செய்த போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வழக்கறிஞர் அல்ல என்பது தெரியவந்தது. மேலும் அவர் இது போன்ற போலி ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை திருச்சி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close