6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

  அனிதா   | Last Modified : 26 Apr, 2019 04:00 pm
6-year-old-girl-sexually-abused-7-year-jail-sentenced-to-guilty

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருச்சி பீமநகர் கோரிமேட்டை சேர்ந்தவர் அப்பாஸ் (45). இவர் அப்பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்து தொழில் புரிந்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோட்டை மகளிர் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

இந்த வழக்கு இன்று திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அப்பாஸுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி  மகிழேந்தி உத்தரவிட்டார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close