பேருந்து பயணியிடம் நகை பறிக்க முயன்ற பெண்களுக்கு தர்ம அடி!

  அனிதா   | Last Modified : 27 Apr, 2019 03:46 pm
4-women-tried-to-theft-the-bus-passenger-were-handed-over-to-the-police

பேருந்தில் பயணியிடம் நகை பறிக்க முயன்று தப்பியோடி 4 பெண்களை பொதுமக்களே மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

கோவை டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில், கைக்குழந்தையுடன் 4 பெண்கள் ஏறியுள்ளனர். கூட்டமாக இருந்த பேருந்தில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் மற்றும் உடனிருந்த இன்னொரு பெண்ணிற்கும் அமர இடமளித்துள்ளனர். பேருந்து சென்று கொண்டிருக்கும் போது, அந்த நால்வரும் இணைந்து கூட்டாக பிறரை மறைத்து நின்றவாறு முன்பக்கம் உள்ள சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்றுள்ளனர்.

இதனை பார்த்த சக பயணிகள் அவர்களை மடக்கி பிடித்தனர். வைசியாள் வீதியில் பேருந்தை நிறுத்தியதும், நான்கு பெண்களும் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடினர். கெம்பட்டி காலனி பகுதிக்குள் ஓடிய பெண்களை, சில பேருந்து பயணிகள் பின்தொடர்ந்து பிடிக்க முயன்றனர். அப்போது திருடர், திருடர் என சத்தமிட்டதால், 4 பெண்களையும் அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அந்த நால்வரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.  

இதுகுறித்து தகவலறிந்து வந்த கடைவீதி காவல் நிலைய போலீசார்  4 பெண்களையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close