ராமேஸ்வரம் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.
வங்கக் கடலில் ஃபனிபுயல் உருவாக இருப்பதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால்மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் தன்டோரா போட்டு அறிவித்துள்ளனர்.