திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தால் கடும் நடவடிக்கை: தேர்தல் அலுவலர் நாகராஜன்

  Newstm Desk   | Last Modified : 28 Apr, 2019 12:19 pm
if-cash-paid-for-vote-in-thiruparankundram-the-action-will-be-taken

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பணபட்டுவாடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் நாகராஜன் தெரிவித்துள்ளார். 

மதுரையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியின்றி அதிகாரிகள் நுழைந்து ஆவணங்களை எடுத்துசென்ற விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அலுவலராக இருந்த நடராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக ச.நாகராஜன் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணைய பரிந்துரைப்படி நான் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அமைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில் நாளை தேர்தல் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் 9 பறக்கும்படையினர் உள்ள நிலையில் கூடுதலாக பறக்கும் படையினர் நியமிக்க உள்ளதாக தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close