ஆசியப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரருக்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு!

  அனிதா   | Last Modified : 28 Apr, 2019 01:47 pm
manimaran-won-silver-medal-in-asian-games-great-welcome-in-trichy

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரருக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தமிழ்நாடு வன தோட்ட கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் ஆசிய  விளையாட்டுப்போட்டியில், ஸ்குவாட், டெட்லிப்ட் மற்றும் ஒட்டு மொத்த பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதுமட்டுமின்றி ஆசிய இரும்பு மனிதர் என்ற பட்டத்தையும் தட்டி சென்றார். 

இன்று நாடு திரும்பிய வெள்ளி வென்ற வீரர் மணிமாறனுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close