சாலையின் நடுவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: மக்கள் அதிர்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 28 Apr, 2019 07:27 pm
sudden-pit-in-the-middle-of-the-road-people-shocked

மதுரை மேல அனுப்பானடியில் சாலையின்  நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் உள்ள சாலையின் நடுவே இன்று நண்பகல் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் ஆள்நடமாட்டம் குறைந்து காணப்பட்டதை அடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அந்த சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

பாதாள சாக்கடை குழாயில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, கழிவு நீர் தொடர்ந்து வெளியேறியதால் ஏற்பட்ட மண் அரிப்பால் இந்த பள்ளம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பள்ளம் விழுந்து 6 மணி நேரம் ஆகியும் மாநகராட்சி ஊழியர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close