பட்டப்பகலில் மூதாட்டியின் செயினை பறித்த வாலிபர்கள்: அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

  அனிதா   | Last Modified : 29 Apr, 2019 09:04 am
young-people-robbery-video-release

மதுரையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் மூதாட்டியின் செயினை பறித்து சென்ற வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை விளாங்குடி டென்சி காலனி பகுதியில் நாச்சியார் என்ற மூதாட்டி அருகில் உள்ள கடைக்கு நேற்று மதியம் 3 மணியளவில் சென்றுள்ளார். அப்போது, பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் மூதாட்டியின் அருகில் வந்து முகவரி கேட்பது போல மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை அறுத்துகொண்டு தப்பியோடினர்.

இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தலைக்கவசம் அணியாமல் துணிச்சலாக தங்களை அடையாளம் காணும் வகையில், செயினை பறித்து சென்ற காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு கூடல் புதூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து இரு வாலிபர்களையும் தேடிவருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close