புதுச்சேரி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.57% தேர்ச்சி!

  அனிதா   | Last Modified : 29 Apr, 2019 10:40 am
sslc-exam-result-released

புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.57 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், தமிழகத்தில் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் புதுச்சேரியில் 97.57 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.20 சதவீதம் அதிமாகும். அரசு பள்ளிகளில் 94.88 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 

மேலும், தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 152 சிறைக்கைதிகளில் 110 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல், தேர்வெழுதிய 4816 மாற்றுத்திறனாளி மாணாக்கரில்  4395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close