தமிழகத்தில் வெடிகுண்டு வைக்க திட்டமா?

  அனிதா   | Last Modified : 29 Apr, 2019 01:43 pm
plan-to-bomb-in-tamilnadu

இலங்கையை போன்று 3 மாதத்தில் தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படும் என மதுரையை சேர்ந்த சாமி என்பவர் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட, மதுரையை சேர்ந்த சாமி என்பவர், இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் போன்று இன்னும் 3 மாதத்தில் தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்த சிலர் திட்டமிட்டிருப்பதாகவும், இலங்கைக்கு ராமநாதபுரத்தில் இருந்து தான் ஆட்கள் சென்றுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும், தான் மதுரையில் வழக்கறிஞராக பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், என்னை தொடர்பு கொள்ள வேண்டாம். டிஜிபி, செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன் என கூறியதோடு மதுரை மாவட்ட ஆட்சியரும் இதில் உடந்தையாக இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதை தொடர்ந்து, சாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close