திருமணத்திற்கு பெண் வீட்டார் மறுப்பு: காதலியின் வீட்டு முன்பு தீக்குளித்த வாலிபர்!

  அனிதா   | Last Modified : 30 Apr, 2019 02:46 pm
young-man-suicide-before-the-girlfriend-s-house

ராமநாதபுரம் அருகே திருமணத்திற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்ததால், காதலியின் வீட்டு முன்பு வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நாராயணசாமி வீதியை சேர்ந்தவர் இம்மானுவேல் ராஜ் (26). இவர் கோவையிலுள்ள தனியார் தண்ணீர் விநியோக நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் புலியகுளம் பெரியார் நகரிலுள்ள ஒரு வீட்டு முன்பு, நின்று கொண்டு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

இதைக் கண்ட அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள்  தீயை விரைவாக அணைத்து, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளைஞர் இம்மானுவேல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளைஞர் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க பெண்ணின் வீட்டார் மறுப்பு தெரிவித்ததால், காதலியின் வீட்டு முன்பு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close