ஆற்காடு சுரேஷ் உட்பட 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் கைது!

  அனிதா   | Last Modified : 30 Apr, 2019 02:46 pm
rowdy-suresh-and-mercenary-gang-arrested

சென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் உள்பட கூலிப்படை கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பேசின் பாலம் அருகே கூலிப்படையை சேர்ந்த கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பேசின் பாலம் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷ் அவரது கூட்டாளிகள் மாரி, பிரசன்னா, சந்திரகாந்த், ராகா ஆகிய 6 பேர் மீதும் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close