திருச்சி மத்தியசிறையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் !

  டேவிட்   | Last Modified : 30 Apr, 2019 06:10 pm
tobacco-seized-in-trichy-central-jail

திருச்சி மத்திய சிறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

திருச்சி மத்திய சிறையில் தண்டணை கைதிகள், விசாரணை கைதிகள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு செல்போன் பயன்பாடு மற்றும் புகையிலை பொருட்கள் புழக்கம் உள்ளதா என்றும் அவ்வப்போது காவல்துறையினரால் திடீர் சோதனை நடத்தப்படுவதுடன், பல இடங்களில் செல்போன்கள், சிம் கார்டுகள், கஞ்சா பொட்டலங்கள் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிறைத்துறை ஐஜி உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் காவல்துறை உதவி ஆணையர் பாலச்சந்திரன் தலைமையில் 25க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். உயர் பாதுகாப்பு அறை, சிறை மருத்துவமனை, சிறைவளாகம், கைதிகள் அறை, குளியலறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் புகையிலை, செல்போன்கள் ஏதாவது மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என சோதனை நடத்தினர். காலை 6மணி முதல் 8மணிவரை நடைபெற்ற இந்தசோதனையின்போது உணவுப்பொருட்களுடன் புகையிலைபொருட்கள் மறைத்து வைத்து இருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close