ராமலிங்கம் கொலை வழக்கு: தேசிய புலனாய்வு விசாரணை

  அனிதா   | Last Modified : 01 May, 2019 02:28 pm
ramalingam-murder-case-national-investigation-agency-investigation

கும்பகோணத்தில் மதமாற்றத்திற்கு எதிராக போராடிய திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. 

கும்பகோணத்தில், மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்த்த திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏ.எஸ்.பி சவுக்கத் அலி தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக ராமலிங்கத்தின் மகனிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close