தேசிய அளவிலான யோகசனப் போட்டியில் கோவை பெண்கள் தங்கம் வென்று அசத்தல்!

  அனிதா   | Last Modified : 01 May, 2019 03:38 pm
kovai-women-win-gold-medal-in-the-national-level-yoga-contest

அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகசன போட்டியில் கோவையை சேர்ந்த இரண்டு பெண்கள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

4வது தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் அந்தமானில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றன. சப் ஜூனியர், சூப்பர் ஜூனியர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகவீரர்கள் (47 பேர்) உட்பட நாடு முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர்.

இந்த போட்டியில் கோவையை சேர்ந்த 100 வயது கொண்ட பத்மஸ்ரீ விருதை பெற்ற ஞானம்மாள் ஓசோன் யோகா பயிற்சி  மையத்திலிருந்து பாலகிருஷ்ணன் தலைமையில் சென்ற 20 நபர்கள் தங்க பதக்கமும், 30 முதல் 40 வயது கொண்ட யோகாசன போட்டியில் கௌசல்யா என்பவர் தங்க பதக்கமும், புவனேஸ்வரி என்பவர் வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close