புயல் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் ஒப்புதல்: சத்தியபிரதா சாஹூ

  Newstm Desk   | Last Modified : 02 May, 2019 01:58 pm
the-election-commission-approves-the-meeting-of-the-storm

புயல் தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைசெயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த 2,202 கிலோ தங்கத்தில் 14 கிலோ தங்கம் மட்டுமே மீதமுள்ளதாகவும், மற்றவை உரிய ஆவணங்களின் அடிப்படையில் உரிமையாளர்களிடம் அளிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். 

தேர்தல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா. சில அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்த மனுவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருப்பதாக கூறிய அவர், அதிகாரிகளை மாற்றுவதா? இல்லையா? என்ற முடிவை ஆணையமே எடுக்க முடியும் என்றும் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.

மேலும், புயல் தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக சத்தியபிரதா சாஹூ தெரிவித்தார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close