பருவமழை வேண்டி யாகம்: இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தல் !

  டேவிட்   | Last Modified : 02 May, 2019 01:55 pm
special-worship-for-rain-hindu-department-advised-to-all-temples

இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழ் உள்ள முக்கியத் திருக்கோயில்களில், பருவமழை வேண்டி யாகம் செய்திட இந்து சமய அறநிலையத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. 

இந்துசமய அறநிலையத் துறை அதன் கீழ் இயங்கும் கோயில்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

2019-20ஆம் ஆண்டு நல்ல பருவ மழை பெய்து நாடு செழிக்க இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கியத் திருக்கோயில்களில் மழை வேண்டு யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கீழ்கண்ட நிகழ்ச்சிகளை தத்தம் பிரிவில் உள்ள முக்கிய திருக்கோயில்களில், அந்தந்த திருக்கோயில்களின் பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு நடத்திட அனைத்து சார்நிலை அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

- பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல்
- அருள்மிகு நந்திப் பெருமானுக்கு நீர்த் தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல்
- ஓதுவார்களைக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமறை ஓதுதல்.
- திருஞானசம்பந்தர் இயற்றிய 12ஆம் திருமுறையில் தேவார மழைப் பதிகத்தை மேகராபக குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல். 
- நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல் வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களைக் கொண்டு வாசித்து வழிபாடு செய்தல். 
- சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் விழா செய்தல்.
- சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல். 
- மகாவிஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல்
- மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல் 
- ஸ்ரீ மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தல்
- குறிப்பாக நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், திருப்புன்கூர் சிவன் திருக்கோயிலில் உள்ள மகாநந்திக்கு மகாபிஷேகம் செய்தல்
- வருண சூக்த வேத மந்திர பாராயணம் செய்தல்
மேற்கண்ட நிகழ்வில் சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்து சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close