அரியவகை பவளப்பாறைகள் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 04 May, 2019 08:39 am
seize-the-rare-coral-reefs

சென்னையில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய அரிய வகை பவளப்பாறைகளை மத்திய வன குற்றப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

சென்னை ஆலந்தூரில் உள்ள பிரபலமான மீன் வியாபார கடையில், மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை சோதனை மேற்கொண்டனர். அப்போது, அரியவகை பவளப்பாறைகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 28 கிலோ பவளப்பாறைகளை பறிமுதல் செய்த மத்திய வன குற்றப்பிரிவு அதிகாரிகள் இது குறித்து கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடல்வாழ் உயிரினங்களுக்கும், கடல் சுற்றுப்புறத்திற்கும் இதயம் போன்று கருதப்படும் இந்த பவளப்பாறைகளை விற்பனை செய்வதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கள்ளச்சந்தையில் இது போன்ற பவளப்பாறைகள் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகின்றன.  பவளப் பாறைகளை கடத்துவோருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை  சிறை தண்டனை வழங்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close