திருட்டு செல்போன்களை வாங்கி விற்பனை செய்பவர்கள் மீதும் வழக்கு பதிவு!

  அனிதா   | Last Modified : 04 May, 2019 03:15 pm
the-case-is-filed-against-the-buyers

சென்னை ராயப்பேட்டை, மைலாப்பூர் பகுதிகளில் வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் தவறவிடப்பட்ட 44 செல்போன்களை காவல்துறையினர் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். 

சென்னை மைலாப்பூர், ராயப்பேட்டை, ஐஸ் அவுஸ், மெரினா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் தவறவிடப்பட்ட 44 செல்போன்களை மீட்ட காவல்துறையினர் சென்னை மைலாப்பூர் காவல்நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இன்று அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மைலாப்பூர் உதவி ஆணையர் ரமேஷ், " செல்போன் பறிப்பு சம்பவங்கள் மற்றும் தவறவிடப்பட்ட சம்பவங்களில்  தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு செல்போன்களை பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மீட்டுள்ளதாக தெரிவித்தார்.

செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களுக்கு மனவள ஆலோசனைகள் வழங்கி மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடாதவண்ணம் கண்காணிக்கப்படுவதாக கூறிய அவர், திருட்டு செல்போன்களை வாங்கி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீதும் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும்" என எச்சரித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close