குழந்தைகள் விற்பனை விவகாரம்: சிபிசிஐடி அலுவலகத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆஜர்!

  அனிதா   | Last Modified : 04 May, 2019 03:29 pm
child-selling-affair-assistant-director-of-health-at-cbcid-office

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில், சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார்  இன்று ஆஜரானார். 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் சமீபத்தில் அம்பலமானது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த  இந்த வழக்கில் குழந்தைகளை விற்பனை செய்து வந்த,  ராசிபுரத்தை சேர்ந்த செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், கொல்லிமலை மற்றும் பள்ளிபாளையத்தை சேர்ந்த 18 பச்சிளம் குழந்தைகள், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதும், இதற்கு தமிழகம் முழுவதும், பல ஊர்களில் புரோக்கர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. வறுமையில் உள்ள பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை, குறைந்த விலைக்கு வாங்கி, குழந்தை இல்லாமல் ஏங்கும் வசதி படைத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரை தொடர்ந்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை அதிகாரியாக சேலம் சிபிசிஐடி டி.எஸ்.பி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளர். சேலம் காவல் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் காவல் ஆய்வாளர் பிருந்தா ஆகியோரும் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், வழக்கு குறித்த விபரங்களை தெரிவிக்க சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் இன்று சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close