ஒன்றன் பின் ஒன்றாக மோதிகொண்ட வாகனங்கள்: விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதால் தொடரும் விபத்து!

  அனிதா   | Last Modified : 04 May, 2019 03:58 pm
accident-that-continues-to-break-over-the-traffic-rules

கோவை - திருச்சி சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் மிகவும் பரபரப்பாக இயங்கும் சாலைகளில் முக்கிய சாலையாகவும், திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கன்னியாகுமரி போன்ற பல ஊர்களுக்கு செல்லக்கூடிய சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாகவும் திருச்சி சாலை செயல்படுகிறது. இந்த சாலை வழியே நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. 

இத்தகைய சாலையில், வாகனம் ஓட்டி பழகுபவர்கள் வாகனங்களை இயக்குவதும், அதிநவீன மோட்டார் சைக்கிள்களில் அடுத்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவதும் போன்ற போக்குவரத்து விதிமீறல் செயல்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது உண்டு.

அந்தவகையில், இன்றும் ஒரு இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற நபர் திடீரென இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு திரும்பியதால், பின்னால் சென்ற கார் ஓட்டுநர் செய்வதறியாது உடனடியாக பிரேக்கை முழுவதுமாக பிடித்து வாகனத்தை நிறுத்தினார். இதில், காரின் பின்னால் வந்த 2 கார்களும், ஒரு லாரியும், ஒரு அரசு பேருந்தும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. மேலும், அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து பயணியின் மீது விழுந்தது. இதில் பயணியின் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டன. 

பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் பயணிகள் குறைவாக இருந்ததால், மிகப் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அரசு பேருந்து மற்றும் வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவத்தினால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close