சுருளி மலை அருகே உள்ள பூதநாராயணன் கோவிலில் நேற்றிரவு கொள்ளையடிக்க சென்ற கும்பல் காவலாளிகள் இருவரை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் சுருளிமலை பூதநாராயணன் கோவிலில் நேற்று இரவு கொள்ளையர்கள் சிலர் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது கோவிலில் இருந்த இருவர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றதால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவர்கள் இருவரையும் ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in