காசாளர் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்: லீமாரோஸ் மார்டின்

  அனிதா   | Last Modified : 05 May, 2019 05:05 pm
a-serious-investigation-into-the-death-of-the-cashier-leema-rose-martin

மார்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என மார்டின் மனைவி, லீமாரோஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் லாட்டரி அதிபர்  மார்டினிடம் கடந்த பல ஆண்டுகளாக காசாளராக பணியாற்றி வந்துள்ளார். அண்மையில் நாடு முழுவதும் மார்டினுக்கு சொந்தமான பல்வேறு அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், பழனிசாமியிடமும் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், விசாரணை முடிந்த அடுத்த நாள் (மே.4) பழனிசாமியின் உடல் காரமடை அருகே உள்ள குட்டையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து தந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது மகன் புகார் தெரிவித்தார். இந்நிலையில், பழனிசாமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் என  சந்தேகப்படும் வருமான வரித்துறையை சேர்ந்த ராஜன், மார்டின் நிறுவன ஊழியர் ஜான் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். 

இதனிடையே, காசாளர் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என மார்டின் மனைவி, லீமாரோஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் வருமானவரி துறையினர் அதிகமான மன உளைச்சல் அளித்ததாக தெரிகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரித்து மரணத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.  பழனிசாமி குடும்பதினருக்கு அனைத்து விதத்திலும் உறுதுணையாக  இருப்போம் என அதில் தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close