2 மகள்களை கொன்று விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை!

  அனிதா   | Last Modified : 05 May, 2019 06:16 pm
2-daughters-killed-and-mother-suicide

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரு குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்துகொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியை அடுத்த சிறுவள்ளூரை சேர்ந்தவர் செவ்வந்தி. இவருக்கு மதுஸ்ரீ என்ற 5வயது மகளும் தனுஸ்ரீ என்ற 2 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், இன்று வெகுநேரமாகியும் செவ்வந்தி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். 

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று பார்த்தப்போது, 2 குழந்தைகளும் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தாயே குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close