சென்னையில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு முகாம்!

  அனிதா   | Last Modified : 06 May, 2019 12:27 pm
special-camp-to-replace-torn-banknotes

சென்னையில் ரிசர்வ் வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்தும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தரும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

சென்னை தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் காலை 10மணி முதல் 3 மணி வரை இந்த சிறப்பு முகாமானது நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை ரிசர்வ் வங்கியின் தென்மண்டல பொதுமேலாளர் எல்.வி.எஸ். மோகன் தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களிடம் உள்ள கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிச் செல்கின்றனர். நோட்டின் சேதத்திற்கு ஏற்ப புதிய நோட்டானது  வழங்கப்படுகிறது. இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், பத்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ள நாணயம். அதை பொதுமக்க பயன்படுத்தலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த சிறப்பு முகாம் தங்களுக்கு பயன் அளிப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close