என் கணவரை அடித்து கொன்றுவிட்டனர்: காசாளர் பழனிசாமி மனைவி புகார்

  ராஜேஷ்.S   | Last Modified : 06 May, 2019 06:25 pm
my-husband-was-beaten-and-killed-palaniasamy-s-wife-complains

வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, மார்ட்டினின் பணம் குறித்த விவரங்களை கூறியதால், காசாளர் பழனிசாமியை மார்டின் நிறுவனத்தினர் அடித்து கொலை செய்துள்ளதாக அவரது மனைவி சாந்தாமணி புகார் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் மார்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மனைவி சாந்தாமணி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரிய அய்யாவிடம் இன்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில், பழனிசாமி மரணம் தொடர்பாக மார்டின் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மார்டின் நிறுவன உரிமையாளர்களால் அச்சுறுத்தல் இருப்பதால் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.ஜியிடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மனைவி சாந்தாமணி, பழனிசாமி மரணத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகளும், மார்டின் நிறுவனத்தினருமே காரணமென தெரிவித்தார். பழனிசாமியை வருமான வரித்துறை அதிகாரிகள் சாதியை சொல்லி இழிவுபடுத்தியதாகவும், ரெய்டு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தனது கணவரை விடிய, விடிய அடித்து துன்புறுத்தியதோடு, கழுத்தை நெறித்து, கையை அறுத்ததாகவும் அவர் கூறினார். 

3 கோடி தருவதாக காவல்துறை அதிகாரிகள் பேரம் பேசியதாகவும், எங்களது வீட்டை சீல் வைத்து விடுவேன் என காவல் துறை மிரட்டுகின்றனர் என்று கூறிய அவர்,  டி.எஸ்.பி மணி தங்களை மிரட்டுவதாகவும், பணம் வாங்கிக் கொண்டு விலகி விடுமாறு மிரட்டல் விடுக்கின்றார் எனவும் தெரிவித்தார். 

மார்டினின் மனைவி லீமா ரோஸ் எங்களிடம் நேரடியாக பேசவில்லை எனவும், டிரைவர் மூலமாக வருமான வரித்துறை மீது புகார் கொடுக்க சொல்லி மிரட்டுகின்றனர் எனவும் அவர் கூறினார்.  மேலும் மார்டின் நிறுவன ஊழியர்கள் கென்னடி, ராஜா, பிரகாஷ், வேதமுத்து ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

மார்ட்டின், அவரது மனைவி லீமாரோஸ், மார்டின் நிறுவனத்தினர் மீதும், வருமான வரித்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அதுவரை உடலை வாங்கப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close