தாயின் இறப்பு சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படும் பிள்ளைகள்

  ராஜேஷ்.S   | Last Modified : 06 May, 2019 09:54 pm
mother-s-death-certificate-does-not-apply-children-submit-to-the-government

தாய் இறந்து ஆறு வருடம் ஆகியும் இறப்புச் சான்றிதழ் தராததால், அதனை வழங்கக் கோரி அவரது பிள்ளைகள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், குமாரபாளையம், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சபரி சந்துரு. இவரது தம்பி பிரவீன் குமார் மற்றும் தங்கை சுவேதா. இவர்களின் தாய், தந்தையினர் கடந்த 6 வருடத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டனர். 

இந்த நிலையில், தந்தையின் இறப்புச் சான்றிதழை மட்டுமே அரசு அதிகாரிகள் தந்துள்ளதாகவும் இதுவரை தாயின் இறப்பு சான்றிதழ் தரப்படவில்லை. இதனால், தங்களுக்கு பள்ளிகளில் சேர தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற அரசின் ஆவணங்கள் வாங்குவதில் சிக்கல் உள்ளதாக சபரி சந்துரு தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனை தரப்பில் கேட்டபோது தாயின் இறப்பு ஆவணம் தொலைந்துவிட்டதால் தங்களால் கொடுக்க இயலவில்லை என கூறுகின்றனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினரிடம் இறப்பு ஆவணம் கேட்டபோது, இந்த தற்கொலை சம்பவம் பல வருடத்திற்கு முன்பு நடந்துள்ளதால், அதுதொடர்பான  ஆவணங்களை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். எனவே, தங்களது தாயின் இறப்புச் சான்றிதழை பெற்று தர, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close