சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு தேர்வு: கோவை மாணவி அசத்தல்

  முத்து   | Last Modified : 06 May, 2019 10:02 pm
cbse-class-10-exam-is-the-3rd-student-from-coimbatore

சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவையைச் சேர்ந்த மாணவி காவிய வர்ஷினி 497 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

பத்தாம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் கோவை புளியகுளம் பகுதியில் இயங்கி வரும் வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி மாணவி காவிய வர்ஷினி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ள வர்ஷினி, தமிழில் 99, ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்களை பெற்றுள்ளார். 

பீளமேடு பகுதியை சேர்ந்த விவசாயி பாபுவின் மகளான மாணவி காவிய வர்ஷினி  கூறும்போது, "பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் தனது படிப்பிற்கு ஊக்கம் தந்ததாகவும், அன்றைய பாடத்தை அன்றே படித்ததாலும், புரிந்து படித்ததாலும் தன்னால் இந்த சாதனையை எட்ட முடிந்தது" என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். எதிர்காலத்தில் மருத்துவராக விரும்புவதாக காவிய வர்ஷினி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close