அக்ஷய திருதியில் மரக்கன்றுகள் நட்டு அசத்திய தன்னார்வ அமைப்பு!

  அனிதா   | Last Modified : 07 May, 2019 02:44 pm
trees-planted-on-akshayatriti

அக்ஷயதிருதியையொட்டி, திருச்சியில் தன்னார்வ அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.  

அக்ஷய திருதி தினமான இன்று, தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதும், தர்மம் செய்தால் செல்வம் கொழிக்கும் என்பதும் மக்களின் நம்பிக்கை. இதனால் தங்க ஆபரணக்கடைகளில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில், மழையின்றி மக்கள் மற்றும் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை மனதில் கொண்டு, மரம் வளர்த்து மழை பெருக வேண்டி தன்னார்வ அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

திருச்சி மன்னார்புரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.  அதனை தொடர்ந்து தன்னார்வலர்கள் பலர் சாலை ஓரங்கள் மற்றும் ரவுண்டானா பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும், மழைப்பொழிவை ஏற்படுத்தும் மரக்கன்றுகளை நட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close