சர்வதேச கராத்தே போட்டி : தங்கம் வென்ற தமிழக தங்கங்கள் !

  அனிதா   | Last Modified : 07 May, 2019 04:39 pm
gold-winners-from-tamil-nadu-in-international-karate-competition

சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்று தமிழகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சர்வதேச அளவிலான 16வது ஒக்கினவா மோஜிரியோ கராத்தே போட்டி மலேசியாவின் இப்போ நகரில் கடந்த 2 -ம்தேதி முதல் 5 -ம்தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம், உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி உள்ளிட்ட போன்ற நாடுகளில் இருந்து 200 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பல்வேறு எடைப் பிரிவுகளின்கீழ் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் சார்பில் தமிழகத்திலிருந்து 13 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் கட்டா, குமுதி ஆகிய போட்டிகளில் 3 சுற்றுகளில் தங்களது திறமையினை வெளிப்படுத்திய தியானேஸ், தஸ்னிம், இலக்கியா உள்ளிட்ட 4 பேர் தங்கப்பதக்கங்களையும், இதர வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களையும் பெற்றனர்.

மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பிரிவில் 2 -வது இடத்தையும் இந்திய அணி கைப்பற்றியது. சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் அவர்களது பெற்றோர்கள்,  பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர்  கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அடுத்து நடைபெறவுள்ள உலக கராத்தே போட்டிகளில் பங்கேற்க இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close