அரசு மருத்துவமனையில் மின்தடை: 3 நோயாளிகள் பலி!

  அனிதா   | Last Modified : 08 May, 2019 11:18 am
power-cut-in-government-hospital-3-patients-death

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் திடீர் மின் தடை காரணமாக அவசர சிகிச்சைபிரிவில் இருந்த 3 பேர்  உயிரிழந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மதுரையில் உள்ள  ராஜாஜி அரசு மருத்துவமனையில், தினசரி சுற்றுப்புற மாவட்டங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், நேற்று மாலை முதல் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மழை பெய்தது. 

இதையடுத்து நேற்று நள்ளிரவு திடீரென மின் தடை ஏற்பட்டது. இந்த மின்தடை காரணமாக மருத்துவமனையில் வென்டிலேட்டர் இயங்காததால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வந்த 15 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதில், மல்லிகா, பழனியம்மாள், ரவீந்திரன் ஆகியோர் அடுத்தடுத்த 5 நிமிடங்களில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சியடைந்த இறந்தவர்களின் உறவினர்கள் சத்தமிட்டு அழுது கொண்டபடியே மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, மருத்துவர்கள் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை உடனடியாக பிரேத பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், மருத்துவமனையின் அலட்சியம் காரணமாகவே 3 பேரும் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இதற்கு மருத்துவமனை தலைமை மருத்துவர் வனிதா மறுப்பு தெரிவித்துள்ளார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், மின்தடை ஏற்பட்டு ஜெனரேட்டர் இயங்காவிட்டாலும் பேட்டரி பேக்அப்பில் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close