சென்னையில் தரமற்ற குடிநீர் கேன்கள் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 08 May, 2019 11:58 am
seized-non-standard-drinking-water-can

சென்னை, கோயம்பேடு அருகே விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட தரமற்ற குடிநீர் கேன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

சென்னையில் தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தரமற்ற மற்றும் காலாவதியான தண்ணீர் அடைக்கப்பட்ட கேன்கள் விற்பனைக்கு  எடுத்து வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோயம்பேடு ரோகிணி தியேட்டர் அருகே இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 7 மினி வேன்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் கேன்களை சோதனை செய்த போது,  680 கேன்களில் 180 கேன்கள் காலாவதி மற்றும் தரமற்ற தண்ணீர் கேன்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 200க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்களில் போலியான தண்ணீர் நிறுவன பெயர்கள் ஒட்டப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close